கம்மாளம்பூண்டி கிராம கடைகளில் வட்டார சுகாதார குழுவினர் ஆய்வு

உத்திரமேரூர்: கம்மாளம்பூண்டி கிராமத்தில் பஜார் வீதி கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதார குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி கிராமத்தில் பஜார் வீதி கடைகளில் புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் விதமாக சோதனை செய்யப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்த கடைகளில் அவற்றை பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வியாபாரிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ய கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதாரதுறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கம்மாளம்பூண்டி கிராம கடைகளில் வட்டார சுகாதார குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: