அரூர்,செப்.23: அரூர் அடுத்த கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. மாவட்டத்தன் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சந்தைக்கு ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் சந்தைக்கு ஆடுகளை வாங்க வருகின்றனர். புரட்டாசி மாதம் துவங்கி விட்டாலே சந்தைக்கு ஆடு, கோழி வரத்து குறைந்து, விலையும் குறையும். நேற்றைய சந்தைக்கு 270 ஆடுகளை விவசாயிகளை விவசாயிகள் ஓட்டி வந்திருந்தனர். சந்தையில் ஆடு விலை எடைக்கு தகுந்தாற்போல் ₹5,500 முதல் ₹10,500 வரையும், கோழி ₹350 முதல் ₹900 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக நேற்றைய சந்தையில் ₹15 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post கம்பைநல்லூர் சந்தையில் ஆடு விற்பனை மந்தம் appeared first on Dinakaran.