×

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்தோறும் சிறப்பு ரயில்

நெல்லை: செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செவ்வாய்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் (எண்.06011) வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 24ம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இரவு 8.40 மணிக்கு புறப்படும். மறுதினம் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.

மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (எண்.06012) வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை செவ்வாய்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் மாலை 4.30 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரயில்களில் ஒரு முதல் வகுப்பு பெட்டி, ஒரு 2 டயர் ஏசி பெட்டி, இரண்டு 3டயர் ஏசி பெட்டிகள் மற்றும் 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 3 முன்பதிவற்ற பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இடம் பெறும்.

இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது. இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : August, September, Red Fort, Chennai, Special Train
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...