×

கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் வெயிலின்  தாக்கம் மட்டுமின்றி, மழைக்காலங்களிலும் இங்கிருந்து  வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் விற்பனைக்காக  அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைக்காக மே மற்றும்  ஜூன் மாதம் ஊராடங்கால், இளநீர் அறுவடை  குறைவானது. கடந்த மாதம் துவக்கத்திலிருந்து, ஊரடங்கு ஓரளவு  தளர்வால் இளநீர் அறுவடை அதிகரித்ததுடன்,   வெளியூர்களுக்கு அனுப்பி  வைக்கும் பணி அதிகமானது. ஆனால், கடந்த ஜூலை மாதம் துவக்கத்திலிருந்து  சிலவாரமாக தொடர்ந்து பெய்த மழையால், வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி  மந்தமானது. அந்நேரத்தில் தமிழக பகுதிக்கு இளநீர் அனுப்பும் பணி குறைவாக  இருந்தாலும், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக  வாங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி  ஓரளவு இருந்தது. இந்நிலையில்,  கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மழை சற்று குறைவால்,  இளநீரின் அறுவடை அதிகமானதுடன், வெளி மாவட்டங்களுக்கு பச்சைநிற இளநீர்  மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவை அனுப்பும் பணி மீண்டும் அதிகரித்துள்ளது.  நேற்றைய நிலவரப்படி பண்ணை தோட்டங்களில்  ஒரு இளநீர் ரூ.29ஆக  நிர்ணயிக்கப்பட்டதாக, தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்….

The post கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில்...