காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே தூங்குபவரா நீங்கள்..? உஷார்... : சென்னை அருகே பெண் பலி

சென்னை: சென்னை அருகேயுள்ள கானத்தூரில் ஹெட்போன் அணிந்தவாறு தூங்கிய பாத்திமா என்ற பெண்மணி நினைவு திரும்பாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு காதில் ஹெட்போன் மாட்டியபடி பாட்டு கேட்டவாறு தூங்கிய அவர், சுயநினைவு இழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் கணவர் அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்காமல் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த அவரின் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பாத்திமாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பாத்திமாவின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் இருந்ததால் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உயிரிழந்த பாத்திமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பாத்திமா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இரவில் ஹெட்போன் அணிந்தவாறு செல்போனில் பாடல்கள் கேட்டுக்கொண்டே தூங்கியதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன. காதில் ஹெட்போன் அணிந்து தூங்கினால் மின்சாரம் தாக்க கூடும் என சமூக ஊடகங்களில் தகவல்கள் உலா வந்த நிலையில், பாத்திமா உயிரிழந்துள்ள சம்பவம் அத்தகவல்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: