×
Saravana Stores

கடல் சார் ஆய்வு பல்கலை. துணைவேந்தர் டிஸ்மிஸ்: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் யுஜிசி விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனடியாக பதவி விலக கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரள பல்கலைக்கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், கவர்னரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கொச்சியிலுள்ள கேரள மீன்வளம் மற்றும் கடல் சார் ஆய்வு பல்கலைக்கழக துணைவேந்தர் ரிஜி ஜான், யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டுள்ளதால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி இதே பல்கலைக்கழக பேராசிரியரான விஜயன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று பரிசீலித்த தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், துணைவேந்தர் ரிஜி ஜானை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு, கவர்னரை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள துணைவேந்தர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது….

The post கடல் சார் ஆய்வு பல்கலை. துணைவேந்தர் டிஸ்மிஸ்: கேரள ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Marine Research University ,Kerala ,High ,Thiruvananthapuram ,UGC ,High Court ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும்,...