×

கடந்த அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4% சரிவு

புதுடெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த அக்டோபர் மாதத்தில் 4 சதவீதம் சரிந்தது.  நாட்டின் தொழில்துறை உற்பத்தி விவரங்களை ஒன்றிய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, கடந்த அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி 4 சதவீதம் சரிந்தது. இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி புள்ளி குறியீடு 4.2 சதவீதமாக இருந்தது. 2020 ஆகஸ்ட்டில் அதிகபட்சமாக மைனஸ் 7.1 ஆக சரிவடைந்தது. பொருட்கள் உற்பத்தி முந்தைய ஆண்டு 3.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. சுரங்க உற்பத்தி 2.5 சதவீதம், மூலதன பொருட்கள் உற்பத்தி 2.3 சதவீதம், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 15.3 சதவீதம், நுகர்வோர் சாராத பொருட்கள் உற்பத்தி13.4 சதவீதம் சரிந்தது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான தொழில்துறை உற்பத்தி 5.3 சதவீதமாக சரிந்தது. இது முந்தைய ஆண்டு 20.5 சதவீதமாக இருந்தது. இதுகுறித்து இக்ரா அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், ‘‘கடந்த அக்டோபர் மாதத்துக்கான உற்பத்தி புள்ளி எதிர்பார்த்ததை விட மோசமாக சரிவடைந்துள்ளது. தனியார் துறைகளிலும் முதலீடுகள் அதிகரிக்கவில்லை என்பதையும் காட்டுவதாக இது அமைந்துள்ளது’’ என்றார். பண வீக்கம் சரிவு: பண வீக்கம் தொடர்ந்து  அதிகரித்து வந்த நிலையில், கடந்த நவம்பரில் சில்லறை விலை பண வீக்கம் 5.88 சதவீதமாக உள்ளது என தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 11 மாதங்களில் இல்லாத குறைந்த பட்ச அளவாகும். கடந்த அக்டோபரில் சில்லரை விலை பண வீக்கம் 6.77 சதவீதமாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 4.91 சதவீதமாகவும் இருந்தது….

The post கடந்த அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4% சரிவு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED கடந்த மே.5ம் தேதி நடந்த நீட் தேர்வை...