×

ஓராண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, செப்.8: கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனிஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், இம்மாதம் 2ம் வாரத்தில் துவக்கப்பட உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ்வழிக் கல்வியில், இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ₹25ஆயிரம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ₹100 செலுத்த வேண்டும்.

இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதை கடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் ஆகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் தொடர்புக்கு முதன்மை அலுவலர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியர்கள் கோவிந்தன்- 9942279190, சசிகுமார்- 9786792696, 8778496406 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஓராண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Anisharani ,Principal Officer ,Piure Zone Research Station ,Krishnagiri District ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...