×

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர்: ஓசூர் பழைய நகராட்சியில் இருந்த அப்பாவு பிள்ளை சிலை, வணிக வளாக கட்டிடங்கள் கட்டுவதற்காக அகற்றப்பட்டுள்ளது. இந்த சிலையை உடனடியாக மாநகராட்சியில் வைக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். வட்ட தலைவர் ராஜாமணி வரவேற்றார். இதில் பட்டு வளர்ச்சி துறை மண்டல தலைவர் சீனிவாசலு, போக்குவரத்து துறை மாநில குழு குணசேகரன், வங்கி ஓய்வூதியர் சங்கம் சத்யநாராயணன், தபால் துறை தலைவர் ராமமூர்த்தி, பிஎஸ்என்எல் செயலாளர் சுப்பிரமணியம், கல்வித்துறை தலைவர் கெம்பண்ணா, சர்வே துறை சிவராஜ், தலைமை ஆசிரியர் ஜானகி, சுகாதாரத்துறை ராணி, கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். வெங்கடேசன் நன்றி கூறினார்.

The post ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pensioners Association ,Hosur ,Appavu Pillai ,Municipality ,Dinakaran ,
× RELATED ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து