×

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மாநில அரசு பணியாளர்களுக்கான ஆணையை பின்பற்றி மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் திருத்தப்பட்ட வீதத்தில் அகவிலைப்படியை அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. அனுமதிக்கப்பட்ட கூடுதல் தவணை அகவிலைப்படி 1.7.22 முதல் வழங்கப்படும். திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்கு குறைவாக வரக்கூடிய தொகை,  அது 50 காசு அதற்கு மேல் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும். அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும். இந்த அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள், பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் முதலியவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில், தொகையை திரும்ப பெறும் தகுதியுள்ள, திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் திரும்பப்பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள், தற்போதைய மற்றும் எதிர்கால குடும்ப ஓய்வூதியர்கள், பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களை பொறுத்தவரையில் அகவிலைப்படி விகிதாச்சாரத்திற்கு இணங்க பிரிக்கப்படலாம். தமிழ்நாடு மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதாவது, கன்னியாகுமரி மாவட்டம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களில் அதே நாளில் ஓய்வூதியம் பெறுகின்ற முந்தைய திருவாங்கூர்-கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின்கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு  பொருந்தும்….

The post ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Department of Finance of the Government of Tamil Nadu ,Government ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பு...