×

ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 27: கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நீட் தேர்வு தேர்வு ரத்து செய்யக்கோரியும், முறைகேட்டை கண்டித்தும் நேற்று எஸ்டிபிஐ கட்சியினர் கண்ணை கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  அப்போது மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர் பேசுகையில்,‘‘நீட் தேர்வில் ஆண்டு தோறும் பல்வேறு முறைகேடு தொடர்ந்து நடந்து வருகிறது. பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பெற்று கொண்டு வினாத்தாளை வெளியிட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை மாணவ, மாணவிகள் படிக்க கூடாது என்ற நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவக்கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.  இதில், கட்சி நிர்வாகிகள் அப்பாஸ் இப்ராஹிம், உமர் ஷரீப், ஜாபர் சாதிக், சிங்கை நாசர், யாசர் அராபஹ், மகளிர் அணி தலைவி கமீலா பேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக், மாவட்ட செயலாளர் மன்சூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI party ,Union government ,Coimbatore ,STBI ,BSNL ,NEET ,Mustafa ,Dinakaran ,
× RELATED அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்ட...