×

ஐபிஎல் தொடரில் லக்னோ-பெங்களூரு இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோ, பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பெற்றிருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 31வது லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் களம் காண்கின்றன. இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்-ரேட் அடிப்படையில் லக்னோ 3வது இடத்திலும், பெங்களூரூ 4வது இடத்திலும் உள்ளன. இதனால் 5வது வெற்றியை ருசிப்பது யார் என்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. லக்னோ அணி, சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 12 ரன்னிலும், டெல்லியை 6 விக்கெட்டிலும், மும்பையை 18 ரன்னிலும் வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜராத் அணியிடம் 5 விக்கெட்டிலும், ராஜஸ்தானிடம் 3 ரன்னிலும் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கேப்டன் ராகுல், குயின்டன் டிகாக், ஸ்டோனிஸ், அவேஷ்கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். பெங்களூரூ அணி, கொல்கத்தாவை 3 விக்கெட்டிலும், ராஜஸ்தானை 4 விக்கெட்டிலும், மும்பையை 7 விக்கெட்டிலும், டெல்லியை 16 ரன்னிலும் தோற்கடித்தது. பஞ்சாப்பிடம் 5 விக்கெட்டிலும், சென்னையிடம் 23 ரன்னிலும் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கேப்டன் டுபெலிசிஸ், தினேஷ் கார்த்திக், விராட் கோஹ்லி, மேக்ஸ்வெல், ஹசரங்கா, ‌ஷபாஸ் அகமது போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் முன்னிலைபெற இரு அணிகளும் இன்று போராடும் என்பதில் ஐயமில்ைல….

The post ஐபிஎல் தொடரில் லக்னோ-பெங்களூரு இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Bengaluru ,IPL ,Mumbai ,IPL 20 ,Bangalore ,Dinakaran ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...