×

ஐதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தன

சென்னை: ஐதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள்  நேற்று விமானத்தில் சென்னை வந்தன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வெற்றி கண்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக,  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.  குறிப்பாக, 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் முழுமூச்சாக களம் இறங்கி உள்ளது. அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை போட்டு கொள்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு சென்னை வந்த புளூ டார்ட் கொரியர் விமானத்தில் 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் 1,179 கிலோ எடையில் 62 பார்சல்களில் சென்னை பழைய விமான நிலையம் வந்தன. தடுப்பூசி பார்சல்களை, அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதில் 2,21,090 டோஸ் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கும், 88,910 டோஸ் தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய அரசின் தொகுப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன….

The post ஐதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தன appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Hyderabad ,CHENNAI ,Covaccine ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...