×

ஐகோர்ட் நீதிபதி கீழடியில் ஆய்வு

திருப்புவனம்: கீழடி அகழாய்வு பணிகளை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுரேஷ்குமார் நேற்று பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே  கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகையில் தலா 8 குழிகளும் மணலூரில் 3 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவளம், உழவு கருவி, பானைகள், தாழிகள், எலும்புக்கூடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வு பொருட்களை பார்வையிட தினமும் ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி  சுரேஷ்குமார் கீழடி, கொந்தகை அகழாய்வு தளங்களை நேற்று நேரில் பார்வையிட்டார். அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா, ரமேஷ் ஆகியோர் அவருக்கு விளக்கமளித்தனர்….

The post ஐகோர்ட் நீதிபதி கீழடியில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Tiruppuvanam ,Madurai Branch ,Judge ,Suresh Kumar ,Sivagangai district ,Court ,Geezadi ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் சட்டவிரோத குவாரி: வழக்குப்பதிய ஐகோர்ட் கிளை உத்தரவு