×

ஏற்காட்டில் தொடர் மழை மலைப்பாதையில் திடீர் மண் சரிவு

ஏற்காடு, மே 28: சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, லேசான சாரல் மழை பெய்தது. பிற்பகலில் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவில் அருகில் உள்ள பகுதியில், திடீரென மண் சரிவு ஏற்பட்டது. 7 அடி நீளத்திற்கு மண் குடைந்து செல்வதால், எப்பொழுது வேண்டுமானாலும் சரியும் அபாயம் உள்ளது.

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நேரத்தில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகளுக்கு மலைப்பாதையில் பயணிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

The post ஏற்காட்டில் தொடர் மழை மலைப்பாதையில் திடீர் மண் சரிவு appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Yercaud, Salem district ,9th Kondai Uyi ,Salem ,Yercaud… ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்