×

எஸ்.400 ஏவுகணையை இந்தியா வாங்குவதால் பிரச்சனைஇல்லை: அமெரிக்க அமைச்சர் கருத்து

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து 37 ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பில் 5 ‘எஸ்.400’ விமான எதிர்ப்பு ஏவுகணை தளவாடங்களை வாங்க இந்தியா சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இதனால் இந்தியா பொருளாதார தடையை சந்திக்க நேரிடும்’ என்றும் எச்சரித்தார். ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ல் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்க முதல் தவணையாக ரூ.6 ஆயிரம் கோடி கொடுத்தது. இந்த ஏவுகணை தளவாடங்கள் இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து இந்தியா வரும் என்று விமானப்படை தளபதி சவுதாரி குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த கருத்தை சுட்டிக்காட்டி ‘அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் வென்டி ஷெர்மனிடம், ’இந்தியா மீது பொருளாதார தடை வருமா’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அவர் தனது பதிவில், ‘ ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தளவாடம் யாருடைய பாதுகாப்புக்கும் ஏற்றதல்ல. இந்தியா-அமெரிக்கா இடையே நட்புறவு நன்றாக இருப்பதால் இப்பிரச்னையை இருதரப்பும் சுமூகமாக தீர்த்துக் கொள்ளும்’ என்று கூறியுள்ளார்….

The post எஸ்.400 ஏவுகணையை இந்தியா வாங்குவதால் பிரச்சனைஇல்லை: அமெரிக்க அமைச்சர் கருத்து appeared first on Dinakaran.

Tags : India ,US ,minister ,New Delhi ,Russia ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மத சுதந்திரம் மிகவும்...