×

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் மிஷினில் இருந்து நூதன முறையில் கொள்ளையடித்த ஹரியானா கும்பலை சேர்ந்த 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.ஆனால் இன்னும் தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கவில்லை. கைதாகி சிறையில் உள்ள அமீரர்ஸ், வீரேந்தர் ராபர்ட், நஜி முஸைன், சவுக்கத் அலி ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 14 மாநிலங்களில் இந்த கொள்ளை கும்பல் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியுள்ளதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக உள்துறை அதனை விரைவில் மத்திய உள்துறைக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது….

The post எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை காவல்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : SBI Bank ,Chennai Police ,Government of Tamil Nadu ,Chennai ,CPI ,Tamil Nadu government ,CBI ,
× RELATED “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்”...