அண்ணாநகர், ஜூன் 26: நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (26). பிரபல ரவுடி. இவரது தாய் கோபத்தில் வீட்டைவிட்டு விரட்டிவிட்டார். இதனால் விரக்தியில் இருந்த அருணாச்சலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டுவிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்ய வந்துள்ளார்.
அப்போது, திடீரென மயக்கம் அடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தாய் தன்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டு சேர்க்காததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்துள்ளார்.
The post எலி மருத்து சாப்பிட்டு ரவுடி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.
