×

எலான் மஸ்க் சொல்வது பொய்: டிவிட்டர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரலில் ஒப்பந்தம் செய்தார். ஆனால், டிவிட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், அது குறித்த முழு விவரங்களை தராததால் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் மஸ்க் அறிவித்தார். இதனால், டிவிட்டரின் பங்குகள் சரிந்தன. இதையடுத்து, அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விசாரணை வரும் அக்டோபர் 17ம் தேதி முதல், 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று டெலாவேர் சான்சரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மஸ்க் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘உண்மையான பயனர்களின் எண்ணிக்கை 6.5 கோடிக்கு குறைவாக இருப்பதை மறைத்து, 23.8 கோடி பயனர்கள் இருப்பதாக கூறி டிவிட்டர் என்னை ஏமாற்றி விட்டது. குறைந்த பயனர்கள் பார்க்கும் விளம்பரத்தின் மூலம் நான் எப்படி வருவாய் ஈட்ட முடியும்?,’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டிவிட்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஒப்பந்தத்தை மீறுவதற்காக உண்மைக்கு புறம்பான பொய்களை மஸ்க் கூறியுள்ளார்,’ என்று தெரிவித்துள்ளது….

The post எலான் மஸ்க் சொல்வது பொய்: டிவிட்டர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Twitter ,Washington ,Tesla ,Dinakaran ,
× RELATED வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!!