×

எருத்துக்காரன்பட்டியில் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

 

அரியலூர், ஜூன் 12: அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் காவல்துறை சார்பில் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். மேலும் கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபான விற்பனை, கஞ்சா பழக்கம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை உடனடியாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் செந்துறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் சித்ரா தலைமை வகித்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். போதைப்பொருள்கள் கடத்துவது மற்றும் விற்பனை தெரிய வந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post எருத்துக்காரன்பட்டியில் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Eruthukaranpatti ,Ariyalur ,Eruthukaranpatti Panchayat ,
× RELATED வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி