×

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதாகும் குழாய்கள்

ஈரோடு : ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக போடப்பட்ட மெயின் குழாய்கள் தரமற்று உள்ளதால், ஆங்காங்கே பழுதடைந்து வருகிறது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரால், காவிரி ஆறு மிகவும் மாசுபடிந்து வருகிறது. இதனால், ஈரோடு மாநகராட்சி நீரேற்று நிலையங்கள் மூலம் விநியோகிக்கும் குடிநீர் மிகவும் மாசுபடிந்து பயன்படுத்தவே தகுதியற்ற நிலையில் இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.484 கோடியே 45 லட்சம் செலவில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.    இத்திட்டப்பணிகள் நிறைவு பெற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. திட்ட சோதனை ஓட்டத்தின் போது, பல்வேறு இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில், ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு வரை 21 கி.மீ., தொலைவிற்கு போடப்பட்டுள்ள மெயின் குழாய்கள் தரமற்ற நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஆகிய இடங்களில் ஓடைகளின் குறுக்கே போடப்பட்டுள்ள குழாய்களில் ஆங்காங்கே சிமென்ட் கலவை பெயர்ந்து குழாயின் உள்ளே உள்ள காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. உயர் அழுத்தத்துடன் தண்ணீர் செல்லும் போது, குழாய்கள் எந்த நேரத்திலும் உடையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சோதனை ஓட்டத்தின் போதும் இதே போல சிமென்ட் கலவை பெயர்ந்து கம்பிகள் தெரிந்த நிலையில், பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டது. தற்போது பேட்ஜ் ஒர்க்கும் செய்யப்படாமல் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளதால், குழாய்களில் எந்த நேரத்திலும் உடைப்பு ஏற்படலாம் என்ற நிலை உள்ளது. …

The post ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதாகும் குழாய்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?