×

ஊதிய உயர்வு வழங்ககோரி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அரியலூர் மாவட்டத்தில் 5ம் தேதி

பெரம்பலூர், அக்.1: பெரம்பலூர் மாவட்ட தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று (30 ஆம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் 20பேர் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்ப தாவது :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்காக, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம் . இதன்படி வட்டார இயக்க மேலாளர்களுக்கு ரூ.15.450-இல் இருந்து, ரூ30 ஆயிரமும், வட்டார ஒருங்கி ணைப்பாளர்களுக்கு ரூ12,360 இல் இருந்து, ரூ25 ஆயிரமும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இந்த ஊதிய உயர்வினை பணி யாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாவட்ட அலகில் இருந்து விடுவித்தல் வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை பணி புதுப்பித்தல் மற்றும் பணி மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை கைவிடுதல் வேண்டும்.

பணியாளர்களின் எதிர் கால நலன் கருதி வருங் கால வைப்பு நிதி காப்பீடு மற்றும் உயிரிழந்த பணி யாளர்களின் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். பிற துறை சார்ந்த பணிகளை எங்களி டம் செய்யத் திணிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும். சொந்த வட்டாரத்திலேயே பணி புரிய எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்கிற கோரிக்கைகளை தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்காக நிறைவேற்றுத் தர வேண் டும் என அனைத்து பணியாளர்கள் சார்பாக அளித்த அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post ஊதிய உயர்வு வழங்ககோரி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அரியலூர் மாவட்டத்தில் 5ம் தேதி appeared first on Dinakaran.

Tags : Collector ,Rural Livelihood Movement ,Ariyalur district ,Perambalur ,Tamil Nadu State Rural Livelihood Movement of ,district ,Perambalur District ,Dinakaran ,
× RELATED அரியலூரில் 28ம் தேதி வேளாண் இயந்திரங்கள் விழிப்புணர்வு முகாம்