×

ஊட்டியில் ‘பிளம்ஸ்’ விளைச்சல் குறைந்தது:1 கிலோ ரூ.250க்கு விற்பனை

ஊட்டி:ஊட்டியில் பிளம்ஸ் பழம் விளைச்சல் குறைந்ததால் கிலோ ரூ.50க்கு விற்ற பழங்கள் தற்போது ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை விளையும். இந்த பழங்கள் அதிகளவு விற்பனைக்கு வந்தால், கிலோ ஒன்று ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகும்.இம்முறை பிளம்ஸ் பழங்கள் மகசூல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் மார்ச் மாதம் முதல் விளைய வேண்டிய இந்த பழங்கள் தற்போதே சில இடங்களில் விளைந்துள்ளன. மார்க்கெட்டிற்கு குறைந்தளவே பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, ஊட்டி மார்க்கெட்டில் கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மகசூல் அதிகரித்தாலே பிளம்ஸ் பழங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்….

The post ஊட்டியில் ‘பிளம்ஸ்’ விளைச்சல் குறைந்தது:1 கிலோ ரூ.250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...