×

உலகம் பலவிதம்

எரியும் நிலவு

இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருகே வனப்பகுதியில் கடும் காட்டுத் தீ ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள் தீயில் கருகின. சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் தீக்கு பயந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எரியும் காட்டுத் தீக்கு நடுவே முழு நிலவும் தகிக்கிறது.

ஸ்பெயினில் பீட்டா


ஸ்பெயினில் எருது விரட்டு திருவிழாவான ‘சான் பெர்மின்’ உலகப் புகழ்பெற்றது. இந்தாண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டைப் போல, ஸ்பெயினிலும் பீட்டா அமைப்பினர் வேலைகாட்டினர். திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்திய போதிலும், எந்த தடங்கலும் இன்றி எருது விரட்டு களைகட்டுகிறது.

மணமகள்கள் கால்பந்து

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து வரும் நிலையில், அங்கு பல்வேறு விதமான கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கஸானில் நடந்த மணமகள்களுக்கான போட்டியில் மணப்பெண் உடையில் பெண் ஒருவர், பந்தை உதைக்கிறார்.

நீல தேவதைகள்

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம், டேடோனில் கடற்படை போர் விமானங்களில் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘நீல தேவதைகள்’ விமானங்கள் நெருங்கிப் பறந்து நடந்த சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சீறும் எரிமலை

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள மவுண்ட் அகுங்க் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது. எரிமலையிலிருந்து சுமார் 2,000 மீட்டர் தொலைவுக்கு புகையை கக்கியிருக்கிறது. இதனால், எரிமலை வெடிக்கக் கூடும் என்பதால் அருகிலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிமலையிலிருந்து வெளியேறும் புகை மேகத்தை பெண் ஒருவர் புகைப்படம் எடுக்கிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தியாவில் அதிகரிக்கும் அபாயம்;...