×

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததால் ரூ.1,324 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை: தணிக்கை அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்திய கணக்காய்வு தணிக்கை துறை தலைவரின் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதில் ஒன்றிய நிதி ஆணையம் தாமதமாக பகிர்ந்து அளிப்பதை சுட்டிக்காட்டிவுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1,363 கோடி மானியம் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.அதன்படி, 2017-18ம்  ஆண்டு ரூ.365.37 கோடியும், 2018-19 ஆண்டுகளில் ரூ.414.92 கோடி, 2019 -20 ஆண்டுகளில் ரூ.543.31 கோடி என மொத்தம் ரூ.1323.60 கோடி மானியம் விடுவிக்கப்படவில்லை என்றும், இதற்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்று அரசு பதில் அளித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல் திறன் மானியத்தை விடுவிக்காதது அவசியமான நிதி ஆதாரம் பறிக்கப்படுவதற்கு சமம் என்றும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது….

The post உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததால் ரூ.1,324 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை: தணிக்கை அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai ,Audit Audit ,Department of India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்