×

உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்க காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய உள்கட்டமைப்பு  திட்டங்களை ஊக்குவிக்க தமிழக அரசு, இங்கிலாந்து அரசின் காமன்வெல்த்  மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படக் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகைப்படுத்துதல், தர நிலைப்படுத்துதல் மற்றும் முன்னுரிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான திட்டமானது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் (செலவினம்) அருண்ராய், மற்றும் வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பகுதியின் பொது இயக்குநர் ஜென்னிபேட்ஸ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மாற்று முறை நிதியாதாரமாக எதிர்நோக்கியுள்ளன. இதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேலும் அணுகக்கூடியவையாகவும், உள்ளார்ந்ததாகவும் மற்றும் சமநிலையுடையதாகவும் மாறும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு, இங்கிலாந்து அரசின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் ஆய்வு மற்றும் சான்று இயக்குநகரத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது, இந்தியாவில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டின் உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டதாகும். இத்திட்டமானது தமிழ்நாடு அரசின் தேவைக்கிணங்க உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கான ஒரு வரை முறையை உருவாக்கவும், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய முறையால் செயல்படுத்துவதற்கும் பொருத்தமான திட்டங்களுக்கான உத்தேச பட்டியலை தயாரித்து வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிக்க காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Commonwealth and Development Office ,Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Commonwealth of UK Government ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...