×

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாநகராட்சி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” என்னும் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் அரசு தொழிற் பயிற்சி நிறுவனம், பூண்டிபுஷ்பம் கல்லூரி, கண்டியூர் பயோகேர் பயிற்சி நிறுவனம், அரண்மனை அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட களப்பணியாளர்கள், சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய தன்னார்வலர்கள், அருகானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை தன்னார்வலர்கள், சோழநாட்டு பட்டாள தன்னார்வலர்கள், கவின்மிகு தஞ்சை தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியின் நிறைவில் மார்க்கெட் ரோடு பனங்கல் பில்டிங் வளாகத்தில் மாணவர்கள் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் விஜய பிரியா, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல், செயலாளர் பர்வீன் ராமச்சந்திரன் வட்டாட்சியர் சக்திவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் சந்திரா, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் அஜித்குமார், மேலாளர் மோகன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World Environment Day ,Thanjavur ,Thanjavur Corporation ,Tamil Nadu Pollution Control Board ,World Environment Day anti-plastic awareness ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...