×

உரம் விற்பனை முனைய கருவிகளில் மே 10க்குள் புதிய வெர்சன் பதிப்பை விற்பனையாளர்கள் பதிவேற்ற வேண்டும்

நெல்லை, மே 7: நெல்லை மாவட்டத்தில் உரம் விற்பனையில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர்கள் மே 10ம் தேதிக்குள் தங்கள் விற்பனை முனையக் கருவிகளில் வெர்சன் 3.2 என்ற புதிய பதிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மானிய உரங்களை விற்பனை செய்யும் முனைய கருவியை (தொழில்நுட்ப காரணங்களுக்காக புதுதில்லியில் உள்ள தேசிய தகவல் மையம் பழைய பதிப்பான வெர்சன் 3.0, 3.1 ஆகியவற்றை மாற்றம் செய்து வெர்சன் 3.2 என்ற புதிய பதிப்பை உபயோகத்திற்கு கொண்டு வந்துள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சில்லறை உரக்கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனை முனையக் கருவிகளில் பழைய பதிப்பை மாற்றி, புதிய பதிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பழைய பதிப்பை மேம்படுத்தாவிட்டால் வரும் மே 10ம் தேதி முதல் விற்பனை முனைய கருவி செயலிழக்க ஏதுவாகும். பின்னர் அக்கருவியினை புதுப்பிக்கவோ பயன்படுத்தவோ இயலாது. எனவே அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், சில்லரை உர விற்பனையாளர்களும் மே 10ம் தேதிக்குள் தங்கள் விற்பனை முனைய கருவியில் வெர்சன் 3.2 என்ற புதிய பதிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post உரம் விற்பனை முனைய கருவிகளில் மே 10க்குள் புதிய வெர்சன் பதிப்பை விற்பனையாளர்கள் பதிவேற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...