×

உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று வேதா இல்லத்தை கையகப்படுத்தும் முடிவு கைவிடல்: சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும், அதற்காக செலுத்தப்பட்ட ரூ.68 கோடி தொகையை திரும்பப்பெற அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்துவதற்கு அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக்கிற்கு இழப்பீடாக வழங்கிட சுமார் ரூ.67.90 கோடி முந்தைய அதிமுக அரசால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வேதா இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த தொகையையும் வாங்க தீபாவும், தீபக்கும் மறுத்ததால், பணம் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுவதாகவும், இழப்பீடாக செலுத்தப்பட்ட ரூ.67,90,52,033-ஐ திரும்ப பெறுவதாகவும் கோரி சென்னை தெற்கு வருவாய் கோட்டாசியர் சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.        …

The post உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று வேதா இல்லத்தை கையகப்படுத்தும் முடிவு கைவிடல்: சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Veda House ,Madras Law Court ,Chennai ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...