×

உத்தரகாண்டில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: முதல்வர் தாமி போட்டியிட வாய்ப்பு

புதுடெல்லி:  உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜவை சேர்ந்த புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோதிலும் முதல்வராக கட்சி மேலிடம் அவரை நியமித்தது. இதனை தொடர்ந்து 6 மாதங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராவது கட்டாயமாகும். இந்நிலையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் உத்தரகாண்ட் சம்பவாத் சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவில் காலியாக உள்ள பிரஜ்ராஜ்நகர் மற்றும் கேரளாவில் திரிக்காகரா சட்டமன்ற தொகுதிகளிலும் 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வருகின்ற 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகின்றது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 11ம் தேதியாகும். ஜூன் 3ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்….

The post உத்தரகாண்டில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: முதல்வர் தாமி போட்டியிட வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Chief Minister ,Thami ,New Delhi ,BJP ,Pushkar Singh Thami ,Chief Minister Thami ,
× RELATED உத்தராகண்டில் சிக்கியுள்ள 30 பேரை...