×

உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும்

புதுச்சேரி, ஜூன் 23: புதுச்சேரி அரசு துறையில் உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி புதுச்சேரி பட்டதாரி இளைஞர்கள் நேற்று சட்டசபை நோக்கி அமைதி பேரணியாக சென்றனர். சுதேசி மில் அருகே தொடங்கிய பேரணியானது அண்ணா சாலை, நேரு வீதி, மீஷின் வீதி வழியாக மாதா கோவில் அருகே வந்த போது பெரியகடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது கடந்த 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட பணி நியமன விதியின்படி மொத்தம் உள்ள 1,135 பணியிடங்களில் 60 சதவீத பதவி உயர்வு மூலமும், 20 சதவீதம் துறைசார் போட்டி தேர்வு மூலமும், 20 சதவீத பணியிடங்களை நேரடி போட்டித்தேர்வு மூலமும் நிரப்ப வேண்டும்.

ஆனால் அரசு ஊழியர் சங்கங்கள் 20 சதவீத நேரடி பணியிடங்கள் மற்றும் யுடிசி, எல்டிசியிலும் நேரடி நியமனம் மூலம் நிரப்ப கூடாது என்று அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் உதவியாளர் பதவி தான் (1,135) அதிக இடங்கள் உள்ளது. இப்பதவிக்கு 20 சதவீத நேரடி நியமனம் மூலம் நிரப்பினால் இளைஞர்கள் பயன்பெறுவர். எனவே அரசு உடனடியாக உதவியாளருக்கான பணியிடங்களை வெளியிட வேண்டும். யுடிசி மற்றும் எல்டிசி காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சட்டசபை நோக்கி வந்தனர். இப்பேரணியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

The post உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...