×

உதயமார்த்தாண்டபுரத்தில் தூர் வாரியதால் நிரம்பிய சரணாலய ஏரி திருவாரூரில் 2வது நாளாக புத்தக திருவிழா பள்ளி மாணவ, மாணவிகள் குவிந்தனர்

 

திருவாரூர், பிப். 4: திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டை போல் நடப்பாண்டிலும் 2வது புத்தக திருவிழாவானது நேற்று முன் தினம் (2ம் தேதி) துவங்கிய நிலையில் வரும் 11ம் தேதி வரையில் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்.எஸ்.நகரில் இந்த புத்தகத்திருவிழாவிற்காக மிக பிரமாண்ட முறையில் ஷெட் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இருந்து வரும் அனைத்து பதிப்பகத்தினரும் பங்கு பெறும் வகையில் ஸ்டால்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புத்தக திருவிழாவினை நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமையில் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் துவக்கி வைத்தார்.

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும் இந்த புத்தகதிருவிழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்துவரப்பட்டு கண்காட்சியை பார்வையிட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மாலை 4 மணி வரையில் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் மாலை 5 மணியளவில் நாட்டுபுற நிகழ்ச்சியும், 6 மணி முதல் இரவு 8 மணியளவில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று 2வது நாள் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் கண்காட்சியில் ஸ்டால் எண் 14ல் சென்னை சூரியன் பதிப்பகம் வெளியீடு சார்பில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிசென்றனர்.

 

The post உதயமார்த்தாண்டபுரத்தில் தூர் வாரியதால் நிரம்பிய சரணாலய ஏரி திருவாரூரில் 2வது நாளாக புத்தக திருவிழா பள்ளி மாணவ, மாணவிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Udayamarthandapuram ,Tiruvarur ,book festival ,thur Variya ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு