×

உணவு பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி அங்கே கேட்காமல் இங்கு கேட்பது ஏன்?.. எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி

புதுடெல்லி: உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ள ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘ பாஜ அல்லாத மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குச் செல்கிறார்கள். அங்கு தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை. ஆனால், எதிர்ப்பு தெரிவிக்கவும், பிளக்ஸ் பேனர்களை காட்டவும் இங்கு (நாடாளுமன்றம்) வருகிறார்கள். கொரோனா தடுப்பூசிகள் மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து பொய் பிரசாரங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட வேண்டாம்,’ என்று தெரிவித்தார்….

The post உணவு பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி அங்கே கேட்காமல் இங்கு கேட்பது ஏன்?.. எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Parliament ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...