×

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதி; முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

நாகர்கோவில்: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் (90). கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் இடது நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் அவரை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரை நலம் விசாரித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி ஆகியோரும் அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தனர்….

The post உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் குமரி அனந்தன் அனுமதி; முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.

Tags : Kumari Anandan ,CM ,M G.K. Stalin ,Nagargo ,Senior ,Congress ,CM G.K. Stalin ,CM B.C. ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு