×

உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு வெறி நாய்களை கொல்ல முடிவு: கேரள அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் சிறுவர், சிறுமிகள் உட்பட அனைவரும் நாய்களின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர். வெறி நாய் கடித்து தடுப்பூசி போட்ட பின்னரும் ஒரு கல்லூரி மாணவி உட்பட 4 பேர் பலியானது கேரளாவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வெறி நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வெறி நாய் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் அமைச்சர் ராஜேஷ் அளித்த ேபட்டியில், ‘‘கேரளாவில் வெறி நாய் தொல்லை சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெறி நாய்களை கொல்ல உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கேட்கப்படும். தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருப்பதற்கான தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.*சிறுவனை குதறிய நாய்இதற்கிடையே, கோழிக்கோட்டில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுவனை தெரு நாய் கடித்து குதறும் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. வீட்டிலிருந்து வெளியேறி சைக்கிளில் வரும் அந்த சிறுவனை தெரு நாய் ஒன்று கையில் கடிக்கிறது. அந்த சிறுவன் வலியால் தரையில் புரண்டு தப்பிக்க முயன்ற போதிலும் அந்த நாய் விடாமல் கையை கவ்வியபடி இருக்கிறது. ஒருவழியாக அந்த சிறுவன் வீட்டிற்குள் சென்று கதவை மூடியதால் தப்பினான். கேரளாவில் தெரு நாய் தொல்லை எல்லை மீறி இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது….

The post உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு வெறி நாய்களை கொல்ல முடிவு: கேரள அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kerala ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...