×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மல்லூர், ஜூலை 19: பாரப்பட்டியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை திமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் பாரப்பட்டி ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாகவும் விளங்குவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் உமாசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி, ஒன்றிய ஆணையாளர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி ஆணையாளர்(கி.ஊ) கார்த்திக், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சங்கமித்திரை, தெற்கு தாசில்தார் தரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Project Camp ,Mallur ,DMK District ,S.R. Sivalingam ,Stalin Project ,Camp ,Parapatti ,Parapatti Panchayat ,Panamarathupatti Union, Salem District ,Salem East District ,DMK… ,Stalin Project Camp with You ,
× RELATED பாஜவில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் ஐக்கியம்