×

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வினியோகம்

பெ.நா.பாளையம். ஏப்.10: கோவை கே.என்.ஜி.புதூர் மற்றும் பூசாரிபாளையத்தில் மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு வயதானஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் நூறு பேர் தங்க வைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டாலும் விசேஷ நாட்களில் சில தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உணவு கொடுக்கின்றனர். நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு துடியலூரில் உள்ள கிரேஸ் ஏ ஜி ஆலயத்தின் சார்பில் சமூக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் தலைமையில் கே.என்.ஜி புதூர் மற்றும் பூசாரிபாளையத்தில் உள்ள இல்லத்திற்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

The post ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Easter ,P. ,Palayam ,Coimbatore KNG Putur ,Pusaripalayam ,Dinakaran ,
× RELATED மம்தா பானர்ஜியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு