×

ஈரோடு சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய மாடுகள் விற்பனை: கர்நாடக வியாபாரிகள் வருகையால் விற்பனை படுஜோர்

ஈரோடு : ஈரோடு மாட்டு சந்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக வியாபாரிகள் வருகை தந்திருப்பதால் மாடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று மாட்டு சந்தை நடைபெறுகிறது. இங்கு தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, மராட்டிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து செல்வது வழக்கம். ஆனால், கர்நாடகாவில் அண்மையில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவியதால் அங்குள்ள மாட்டு சந்தைகள் மூடப்பட்டன. இதனால், கர்நாடக வியாபாரிகள் மாடுகள் வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் தற்போது சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதால் 2 மாதங்களுக்கு பிறகு ஈரோடு மாட்டு சந்தைக்கு கர்நாடக வியாபாரிகள் வருகை தந்துள்ளனர். இதனால், விற்பனை களைக்கட்டியுள்ளது. ஈரோடு மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக 600 மாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் அவற்றுள் 85% மாடுகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பால் கொள்முதல் விலை உயர்வினால் கறவை மாடுகளை வளர்ப்பதற்காக வாங்கி செல்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாகவும், மாடுகள் ஒவ்வொன்றும் ரூ.30,000 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.    …

The post ஈரோடு சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய மாடுகள் விற்பனை: கர்நாடக வியாபாரிகள் வருகையால் விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Tags : Erode market ,Karnataka ,Erode ,Erode Cattle Market ,
× RELATED கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே...