×

ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நாளை முதல் நிறுத்தம்: 2 மடங்கு நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி பட்டு சேலை, கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி சேலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கிய மூலப்பொருளான பட்டுநூல் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் பட்டுசேலை தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கைத்தறி பட்டுநூல் சேலை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் நடைபெற்றது. சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பட்டுநூல் ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் முதல் 3,500 வரை விற்பனையான நிலையில் தற்போது உற்பத்தி குறைவு காரணமாக ரூ.6 ஆயிரம் முதல் 6,500 வரை விற்பனையாவதால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பட்டு சேலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க ஒன்றிய அரசு மற்றும் ஜவுளித்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை குறைக்க வேண்டியும் நாளை (10ம் தேதி) முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை 10 நாட்களுக்கு பட்டுநூல் வார்ப்பதையும், நெசவு செய்வதையும் நிறுத்தி வைப்பது. இதன் பின்னரும் விலை குறையவில்லை என்றால் போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைத்தறி பட்டுசேலை உற்பத்தியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….

The post ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நாளை முதல் நிறுத்தம்: 2 மடங்கு நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Coimbatore ,Tirupur ,Namakkal ,Sathyamangalam ,
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று...