×

வீட்டுக்கு ஒரு தேனீப்பெட்டி! குடும்பத்தின் ஆயுள் கெட்டி!!

Bee venom therapy என்கிற மருத்துவமுறை சமீபத்தில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இச்சிகிச்சையை அளிக்கும் மருத்துவமனைகள் சீனாவில் ஏராளமாக இருக்கின்றன. நம் கையில் இருக்கும் குறிப்பிட்ட சில நரம்புகளை கண்டறிந்து, தேனீயை வைத்து கொட்டவிடும் சிகிச்சை முறை இது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சித்துறை மருத்துவர்கள். தேனி வளர்ப்பு விவசாயியான ஜோஸ்பின் இதுகுறித்த தகவல்களை வழங்குகிறார்.

டாக்டர் தேனீ!

இச்சிகிச்சைக்கு மரக்கிளைகளில் கூடுக்கட்டும் மழைத்தேனீ அல்லது கொம்புத் தேனீயை நாங்கள் தேர்வு செய்வது கிடையாது. மரக்கிளையில் கூடுகட்டும் தேனீயை மரப்பெட்டியில் அடைத்து வளர்க்கவும் முடியாது. அதைத் தொந்தரவு செய்தால் நம்மை ஓடவிட்டு தாக்கும். நாங்கள் சிகிச்சைக்கு பயன்படுத்துவது பொந்துத் தேனீ அல்லது அடுக்குத் தேனீ வகைகளைதான். இவற்றை தேர்வு செய்துதான் மரப்பெட்டிகளில் வளர்த்து சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறோம்.

ஏன் இந்த சிகிச்சை?

மூட்டுவலி அல்லது முட்டிக்கால் வலி, பிரசவத்துக்கு அறுவைசிகிச்சை செய்துக் கொள்பவர்களுக்கு முதுகுதண்டு வடத்தில் வலி  ஏற்படும். இந்த சிகிச்சையின் மூலம்  நலம் பெறலாம். எளிமையான குறைந்த செலவில் செய்யக்கூடிய சிகிச்சை முறை இது. தேனீ கொட்ட விடும் சிகிச்சைக்கு மேலை நாடுகளில் ஒரு முறைக்கு நம் இந்திய மதிப்பில் ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்னிடம் வருபவர்களுக்கு இதுவரை இலவசமாகதான் இந்த சிகிச்சை முறையை செய்துவருகிறேன்.

வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து ஐந்து வாரம்  எடுத்துக் கொண்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் ஆயுளும் கூடுகிறது. சீனாவில் இச்சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் பலரையும் கொரோனா தாக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு மருத்துவ அறிக்கையில் வாசித்தேன். இயல்பாகவே நோயெதிர்ப்பு சக்தி கூடுவதால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் இவர்களை அணுகுவதில்லை என்று கருதுகிறேன்.

எந்தெந்த நோய்களுக்கு இச்சிகிச்சை பலன் தரும்?

ரத்த அழுத்தம், புற்றுநோய், எலும்புருக்கி நோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு இந்த தெரபி சுகம் தருகிறது. இதயநோய் இருப்பவர்களுக்கு பலன் தருமா என்று பரிசோதனைகள் இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் என் அனுபவத்தை எடுத்துக் கொண்டால் இத்தேனீ வளர்ப்பு தொடங்கியதிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக எனக்கு காய்ச்சல் கூட வந்ததில்லை.

இந்தியாவில் இச்சிகிச்சை முறை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?

இதுவரை இல்லை. ஆனால், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவர்கள்தான் இச்சிகிச்சையை அளிக்கிறார்கள். நம்மூரிலும் மருத்துவர்கள் இச்சிகிச்சை முறையை பயின்று, மாற்று மருத்துவப் படிப்பாக மாற்றி அரசு அங்கீகாரம் பெற்றுத்தரவேண்டும் என்பது நம் கோரிக்கை.

* 1888ல் மருத்துவர் வியானா 173 பேருக்கு கீழ்வாத நோயாளிகளுக்கு மருத்துவம்  கொடுத்ததாகவும் தானே கீழ்வாத நோய்க்கு தற்செயலாக தேனீயை கொட்ட வைத்து நலம் பெற வைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
 
* 1897ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவ மருத்துவர் ஜ.வி லுபார்ஸ்கி எழுதிய கட்டுரையில் கீழ்வாதத்திற்கு தேனீ நஞ்சு மதிப்புமிக்க நிவாரணம் என்று தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

* 1912ல் டெர்ஷின் புல்வர், ருடால்ஃப் ஆகியோர் தேனீக் கொட்டல் மூலம் மருத்துவம் கொடுக்கப்பட்ட கீல்வாத நோயாளிகள் 660 பேரின் அனுபவங்களைக் குறித்து நூல் வெளியிட்டார். இந்த சிகிச்சை பெற்றதில் 554 பேர் முற்றிலும் குணமடைந்தனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

* 1938ல் பேராசிரியர் எம்.பி கிரோலின் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இதனால் குணமாகிறது என்று உறுதி செய்துள்ளார்.

எப்படி செயல்படுகிறது?

ஒரு தேனீயின் ஆயுட்காலம் அதிகபட்சம் அறுபது நாட்கள்தான். ஐம்பது நாட்கள் வளர்ந்த தேனீயைதான் இந்த சிகிச்சைக்கு நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். ஒருமுறை கொட்டிய பிறகு அத்தேனீயின் ஆயுட்காலம் முடிந்துவிடும். தேனீயின் பின்பக்கக் கொடுக்குதான் அதன் எதிர்ப்புசக்தி நிறைந்த முக்கியமான ஒரு  உறுப்பு. அதை வைத்து கொட்ட விடும்போது பின் பக்கம் ஓட்டையாகி, நீர் நம்  தோலில்பட்டு உடம்புக்குள் சென்றுவிடும். அந்தக் கொடுக்கில் ஃபார்மிக்  அமிலம், ஹைட்ேராகுளோரிக் அமிலம், ஆர்த்தோஃபாஸ் பரிக் அமிலம் ஆகியவை இருக்கின்றன. இந்த சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் அம்மைக்கு ஊசி போட்டதுபோல சின்னத் தடிப்பு ஏற்படும். அந்தத் தடிப்பின் மத்தியில் தேனீயின் கொடுக்கு இருக்கும். அதை சுரண்டி எடுத்து விடுவோம்.

நியூமன், ஹாபர்மன் போன்ற ஜெர்மன் அறிவியலாளர்கள், 1954ஆம் ஆண்டில் தேனீயில் ‘மெலிட்டின்’ என்கிற புரதம் இருப்பதை கண்டுப் பிடித்துச் சொன்னார்கள். மனிதர்களுக்கு ரத்த அழுத்தம்  மற்றும் இருதயநோய் மற்றும்  அடைப்பு இருந்தால், நரம்பு மண்டலத்தில் உள்ள தசைகளையும் அதன் உயிரணுக்களை புதுப்பிக்க வைத்து உயிரோட்டம் கொடுக்கவும் இந்த மெலிட்டின் பயன்படும் என்றும் அறிக்கைக் கொடுத்தார்கள்.

அலர்ஜி ஆகுமா?

லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படலாம். இயல்பாகவே ஊசி குறித்த பயம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்கும் இச்சிகிச்சை முறையை செய்வதில்லை. அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு உடலில் தடிப்பு ஏற்படும். அதிகமாக வியர்வை சுரக்கும். எனவே, சிகிச்சையை தருவதற்கு முன்பாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது அலர்ஜி இருக்கிறதா என்றெல்லாம் தெளிவாக விசாரித்து வைத்துக் கொள்வோம். பொதுவாகவே எல்லோருக்குமே தேனீ கொட்டு வாங்கியதிலிருந்து 24 மணி நேரம் வரை லேசான வலியும், வீக்கமும் இருக்கும். கொட்டப்பட்ட இடத்தில் தேனும், சுண்ணாம்பும் கலந்து தடவுவது, நாமக்கட்டியைக் குழைத்து பத்து போடுவது போன்றவையால் வீக்கமும், வலியும் குறையும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என்பார்களே?

ஆமாம். ஆனால், நாவல் பூவிலிருந்து தேன் எடுத்து நாங்கள் கொடுக்கிறோம். அவர்களுக்கு சீராக இருப்பதோடு, சிலருக்கு இரண்டு ஆண்டுகளில் குணமாகிக்கூட இருக்கிறது.

தொகுப்பு: அ.வின்சென்ட்

Tags : house , A beehive for the house! Family life cartridge !!
× RELATED நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை;...