×

ஈச்சங்காடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்

 

அரியலூர், அக். 17:அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் இன்று(அக்.17), அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், இருங்களாகுறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், கொடுக்கூர், குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைபூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய் ,புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

The post ஈச்சங்காடு பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Echangadu ,Ariyalur ,Sentura, Ariyalur district ,Dinakaran ,
× RELATED அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர்...