×

இலங்கையில் சிலிண்டர் விலை ரூ. 2,657க்கு விற்பனை, 1 லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை : சிரமத்தில் மக்கள்!!

கொழும்பு : இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90% வரை அதிகரித்து ரூ.2,657க்கு விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ளது. சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது; இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே இவற்றின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இந்த நிலையில், இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90% வரை அதிகரித்து ரூ.2,657க்கு விற்கப்படுகிறது. இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1, 400க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், விலை அதிகரித்து ரூ.2,657க்கு எரிவாயு சிலிண்டர் விலை விற்பனையாகிறது.அதே போல 1 லிட்டர் பால் ரூ. 250க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் சமூக வலைத்தளங்களில் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இலங்கை மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் அபாயமான சூழல் ஏற்பட்டிருக்கிறது….

The post இலங்கையில் சிலிண்டர் விலை ரூ. 2,657க்கு விற்பனை, 1 லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை : சிரமத்தில் மக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...