×

இறைச்சிக்காக கடத்தப்பட்டதா?: அசாமில் சாக்கு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட தெரு நாய்களை மீட்டது போலீஸ்..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த தெரு நாய்களை போலீசார் மீட்டனர். கோலக்காட் மாவட்டம் போகாங்கட் பகுதியில் சாலையில் சாக்கு மூட்டைகளில் 31 நாய்கள் கட்டப்பட்டு கேட்பாரற்று கிடந்தன. இதனை பார்த்த உள்ளூர் வாசிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் சென்று பார்த்தபோது அங்கு மூட்டைகளில் கட்டப்பட்டு நாய்கள் கிடந்தன. இதனையடுத்து விலங்கின ஆர்வலர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் நாய்களை மீட்டு உணவு அளித்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் வாகனம் பழுது அடைந்ததால் நாய்களை சிலர் சாலையில் வீசிவிட்டு சென்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களை கடத்திய மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …

The post இறைச்சிக்காக கடத்தப்பட்டதா?: அசாமில் சாக்கு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட தெரு நாய்களை மீட்டது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Assam ,Tispur ,Pokangat ,Kolakad district ,Dinakaran ,
× RELATED குடியரசுத்தலைவர் உரையின்போது...