×

இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை ; நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல: ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன் அமைச்சர் பொன்முடி பேச்சு

கோவை: இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை என கோவை பாரதியார் பல்கலை 37வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக உள்ளனர். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன். நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார். இந்தியை கட்டாயமாக்கக்கூடாது, மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பார்கள். இன்று கோவையில் பானிபூரி கடை நடத்துபர்கள் யார்? எனவும் கேள்வி எழுப்பினார். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகம் இருந்தது ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கியிருப்பதுதான் திராவிடன் மாடல், பெரியார் மண் எனவும் கூறினார். தமிழகத்தில் இன்று படிப்பில் பெண்கள் ஆர்வமாக உள்ளார்கள் என பேசினார். இங்கு ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் பட்டம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தாண்டி தாங்கள் விரும்பும் எந்தவொரு 3-வது மொழியையும் மாணவர்கள் கற்கலாம். ஆனால், அது வலிய திணிக்கப்படக் கூடாது என கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் இஸ்ரேல் தலைவர் சிவன் மற்றும் உயர் அதிகாாிகள் கலந்துக் கொண்டனர். …

The post இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை ; நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல: ஆளுநருக்கு தெரியப்படுத்தவே இதை கூறுகிறேன் அமைச்சர் பொன்முடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Governor ,Minister ,Ponmudi ,Coimbatore ,37th convocation ceremony ,Bharatiyar University ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...