×

இனிது இனிது முதுமை இனிது!

நன்றி குங்குமம் டாக்டர்Senior Citizen Specialமனம்தான்; எல்லாவற்றுக்கும் கிராண்ட் மாஸ்டர். நோயை உருவாக்குவதிலும், அதனை குணப்படுத்துவதிலும் மனமே மிக முக்கியப் பங்காற்றுகிறது. இதனை; பல பெரியவர்களும்; வாய்மொழியாக கூறியிருக்கிறார்கள். நவீன ஆராய்ச்சிகளும் இந்தக் கருத்தை வழிமொழிந்திருக்கிறது. முதுமை இனிது என்று இந்த கவர்; ஸ்டோரி சொல்ல வருவதன் அடிப்படைக் கருத்து இதுதான். நாற்பதைத் தாண்டி விட்டாலே பலருக்கும் நடுக்கம் வந்துவிடுகிறது. அதுவரை வீர வசனங்கள்; பேசியவர்கள் கூட தடுமாற ஆரம்பித்துவிடுகிறார்கள். முதிய பருவத்தை நோய் மிகுந்ததாகவும், நோயாளியாகவே வாழ வைப்பதாகவும் இந்த நம்பிக்கை குறைவே பிரதான காரணமாக இருக்கிறது. எனவே,; முதுமையில் நம் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு நிதானமாகக் கையாண்டால் இளமைப்பருவத்தைவிட முதுமைப்பருவம் என்பது; இன்னும் இனிமையான அனுபவமாக மாறும் வாய்ப்பு உண்டு. முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியும், அவற்றை முன்னெச்சரிக்கை; நடவடிக்கைகளால் தவிர்க்கும் முறை பற்றியும் முதியோர் பராமரிப்பு இயன்முறை மருத்துவர் டேவிட் விஜயகுமார் விவரிக்கிறார்….முதியோர்களிடத்தில் ஏற்படும் உடல்நலக்குறைவுகளை ஐந்து ‘I’ -களாகப் பிரிக்கலாம். Intellectual Impairment (அறிவுசார் குறைபாடு),; Incontinence (சிறுநீர் அடங்காமை), Infection (தொற்று நோய்கள்), Instability (சமநிலையின்மை), Immobility (அசைவற்ற நிலை). இந்த; ஐந்து ‘I’ – களுமே முதியோர்களுக்கு வரும் நோய்களுக்கு அடிப்படைக் காரணிகள். இவற்றை; முதுமையை பயமுறுத்தும் பஞ்சபூதங்கள் (Geriatric; Giants) என்றும் குறிப்பிடுகிறோம். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து பிரச்னைகளுமே முதியோர்களுக்கு வரும் என்பதால் இந்தப் பெயர். குறிப்பிட்ட இந்த 5 சோதனையில் வெற்றி; பெற்றவர்களை முதுமையிலும் திடகாத்திரமாக இருப்பவர்களாக கொள்ளலாம். இவற்றை முன்கூட்டி கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை; எடுத்தாலே, முதுமையில் வரக்கூடிய பிரச்னைகளின் தீவிரத்தன்மையிலிருந்து முதியோர்களை பாதுகாக்க முடியும். இதை விரிவாகப் பார்ப்போம்…அறிவுசார் குறைபாடுமுதியோர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்னை மறதி நோய். இதைத்தவிர்க்க, புதிர்விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, சுடோகு போன்ற; விளையாட்டுகளை விளையாடலாம். அதைவிடவும் சிறந்தது டைரி எழுதும் பழக்கம். ஒருநாளின் நிகழ்வுகளை; Activity basis -ஆக இல்லாமல்,; Action basis-ஆக எழுதவேண்டும். தான் செய்யும் செயல்களை எல்லோருமே நினைவுக்கு கொண்டு வர முடியும். உதாரணத்திற்கு காலையில் எழுந்தேன்;; பல் துலக்கினேன்; குளித்தேன் என்று மேலோட்டமாக எழுதக்கூடாது. ஒருவரால் காலையிலிருந்து, இரவு வரை என்னென்ன செய்தோம் என்பதை எளிதில்; கூறிவிட முடியும். ஏனெனில், பெரியவர்கள் நேரம் தவறாது ஒவ்வொரு செயலையும் செய்பவர்கள் என்பதால், அது பழக்கமாகியிருக்கும். அதற்குப்பதில், காலை எழும்போது எந்த; காலை தரையில் ஊன்றி; எழுந்தேன்; எந்தப்பக்கமாக திரும்பினேன், தலை வாரினேன் – என்று ஒவ்வொரு செயலையும் நினைவுபடுத்தி, விரிவாக எழுதி வந்தால்; நினைவாற்றல் மேம்படும். 60 வயது முதற்கொண்டே இதை பழக்கப்படுத்திக் கொண்டால் முதியவர்களுக்கு வரக்கூடிய குறுகிய கால நினைவக இழப்பை; (Short term memory loss) தவிர்க்கலாம். மறதிநோய் வராமலிருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இப்பயிற்சிகளைச் செய்யலாமே தவிர,; மறதிநோய் வந்துவிட்டால் முறையான சிகிச்சை அவசியம். சிறுநீர் அடங்காமைமுதியவர்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய பிரச்னையாக சிறுநீர் அடங்காமையைச் சொல்லலாம். பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு தசைகளில்; ஏற்படும் தளர்வாலும், ஆண்களுக்கு விதைப்பை நீக்க அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் விதைப்பை தசைத்தளர்வாலும் சிறுநீரை அடக்க; முடியாமல், தன்னிச்சையாக வெளியேறும் நிலை ஏற்படும். இந்தநிலை இவர்களுக்கு மிகவும் தர்மசங்கடத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்கிவிடுகிறது. பெண்கள் பெல்விக் ஃப்ளோர் பயிற்சிகளும் (Pelvic Floor Exercises), ஆண்கள் மற்றும் பெண்கள் Kegal உடற்பயிற்சிகளும் மேற்கொள்வதன்; மூலம் அந்தப்பகுதியில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தலாம். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ஒரே ஸ்ட்ரெச்சாக போகாமல் சிறிது சிறிதாக அடக்கி; வெளியேற்ற பழகிக் கொள்வதன் மூலம் சிறுநீர் அடங்காமை பிரச்னையை சமாளிக்கலாம். வெளிநாடுகளில் எலக்ட்ரோல்ஸ்களை; உறுப்புகளின் தசைகளில்; வைத்து வலுப்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நம்மூரிலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகி வருகிறது. தொற்று நோய்கள்பாக்டீரியல் நிமோனியா. இன்ஃப்ளூயன்சா, சருமத் தொற்று, இரைப்பை குடல் தொற்று மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்று (Urinary Tract Infection); இந்த 5 தொற்று நோய்களும் முதியவர்களுக்கு பொதுவாக வரக்கூடியவை. வயது காரணமாக; நோயெதிர்ப்பு சக்தி குறைவதாலும், நீரிழிவு போன்ற நாட்பட்ட; நோய்களாலும் தொற்று நோய்கள் உண்டாகின்றன. இப்போது குழந்தைகளைப் போலவே முதியவர்களுக்கும் தொற்றுநோய் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 60; வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.சமநிலையின்மைமுதியவர்களுக்கு உடலில் சமநிலை கிடைக்காது. அதன்காரணமாக அடிக்கடி விழுவது, கை, கால்களில் நடுக்கம் (Parkinson) தோன்ற ஆரம்பிக்கும். 60; வயது தொடங்கும் போதே சில அடிப்படை உடற்பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் சமநிலையின்மையை தவிர்க்கலாம். வெறுமனே நடைப்பயிற்சி; என்றில்லாமல், பின்புற நடை (Backward walk), பக்கவாட்டு நடை (Side walk), அடிப்பிரதட்சணம் (Tandem walk) மற்றும் ஒரு காலில்; நிற்க முயற்சி செய்வது. இவற்றை எல்லா முதியோர்களுக்கும் வலியுறுத்துகிறேன். சமநிலையின்மைக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் முக்கிய காரணமாகச் சொல்லலாம். முதியவர்களுக்கு செரிமானப்; பிரச்னை இயல்பாக இருக்கும் ஒன்று.; இவர்கள் தங்களுக்கு ஏதேனும் செரிமானத்தில் பிரச்னை வந்துவிடுமோ என்று பயந்துகொண்டே நிறைய உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். இதனால்; ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எனவே, நல்ல ஊட்டச்சத்தான உணவை எடுத்துக் கொள்வதையும், 6, 7 மணிக்கு முன்னதாக இரவு உணவை முடித்துக்; கொள்வது நல்லது.அசைவற்ற நிலைவயதானாலே எங்கே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அடுத்து; ஆர்த்தரைட்டிஸ், நடுக்கம் போன்றவையும் முதியவர்களை முடக்கிப் போட்டுவிடுகிறது. வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதால் மேலும் உறுப்புகளின்; இயக்கம் மோசமடையும். இப்படி இயக்கமின்மையும், சமநிலையின்மையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. வீட்டிற்குள் சின்னச்சின்ன வேலைகளைச் செய்வது,; அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது என உடலுக்கு இயக்கம் கொடுக்கலாம்.– உஷா நாராயணன்;படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post இனிது இனிது முதுமை இனிது! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr.Senior ,
× RELATED பேக்கரி தொழிலில் அசத்தி வரும் சாஃப்ட்வேர் என்ஜினியர் !