×

இந்திய ராணுவத்தை சேர்ந்த அமைதிப்படை வீரர்கள் 135 பேருக்கு ஐ.நா. விருது

புதுடெல்லி:  தென் சூடானில் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தின் 135 அமைதிபடை வீரர்களுக்கு  ஐக்கிய நாடுகள் சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது.  தெற்கு சூடானில் உள்நாட்டு போரைக்காட்டிலும் மோசமான வன்முறைகள் அரங்கேறியது., குறிப்பிட்ட இனத்தவரிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள், கலவரம், அரசுக்கு எதிரான போராட்டங்கள்  என மோசமான சூழல் நிலவி வந்தது.  இதன் எதிரொலியாக  தெற்கு சூடானின் போர் மற்றும் அகோபோவாவில் இந்திய அமைதிப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்நிலையில் ஜொங்லீ மற்றும் கிரேட்டர் பைபர் நிர்வாக பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்ட கொந்தளிப்பான வன்முறை சம்பவங்களை திறம்பட கையாண்ட இந்திய ராணுவத்தின்  அமைதி படை வீரர்களுக்கு 135 பேருக்கு ஐநா விருது வழங்கி கவுரவித்துள்ளது.தெற்கு சூடானில் இருக்கும் ஐநா தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ,” இந்திய மக்களுக்கு தலை வணங்குகிறோம். தெற்கு சூடானில் சேவைபுரிந்த இந்திய அமைதி காக்கும்படையை சேர்ந்த 135 வீரர்களுக்கு அவர்களது ஜோங்லீ, கிரேட்டர் பைபர் பகுதியிலான அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி விருது வழங்கப்படுகின்றது. ஐநா படை கமாண்டர் ஷைலேஷ் தினாய்கர்  வீரர்களுக்கு  விருதை வழங்கி கவுரவித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது….

The post இந்திய ராணுவத்தை சேர்ந்த அமைதிப்படை வீரர்கள் 135 பேருக்கு ஐ.நா. விருது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,United Nations ,Indian Army ,South Sudan ,UN ,Dinakaran ,
× RELATED வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு:...