×

இந்தியா – சீனா இடையே பிளவு ஏற்படுத்தும் சக்திகள்: சீன வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு

பீஜிங்: ‘இந்தியா எங்களுக்கு கூட்டாளியாக இருக்க வேண்டும். இந்தியா, சீனா இடையே சில சக்திகள் பிளவை ஏற்படுத்துகின்றன’ என்று சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ விருப்பம் தெரிவித்தார். சீனாவின் நாடாளுமன்ற கூட்டம் நேற்று துவங்கியது. இதையொட்டி சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் யாங் யீ நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் சில பின்னடைவுகள் ஏற்பட்டன. இது இரு நாடுகளுக்கும் மக்களின் அடிப்படை நலன்களை பூர்த்தி செய்ய உதவாது. இரு நாடுகளின் உறவு பரஸ்பர வீழ்ச்சிக்காக அல்லாமல்  பரஸ்பர வெற்றிக்கானதாக அமைய வேண்டும். சில சக்திகள் இந்தியா-சீனா  இடையே பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. எல்லை பிரச்னை  வரலாற்றில் இருந்து பின் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவும் சீனாவும்  கூட்டாளியாக இருக்க வேண்டும். இரு நாட்டிகளும் போட்டியாளர்களாக இருக்கக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என்று தான் சீனா எப்பொழுதும்  கூறி வந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சிக்கலான எல்லை, நில பிரச்னைகள் போன்றவற்றை  இரு நாடுகளுக்கு இடையிலான உறவுடன் இணைத்து விடக்கூடாது ’’ என்றார். எல்லை, நில பிரச்னைகள் குறித்த  வாங் யீயின்  கருத்து புதிதாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.  அது குறித்து வாங் யீ  எதுவும் விரிவான விளக்கம் அளிக்கவில்லை….

The post இந்தியா – சீனா இடையே பிளவு ஏற்படுத்தும் சக்திகள்: சீன வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : India ,China ,Foreign Minister ,Beijing ,
× RELATED ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO)...