×

இந்தியாவுக்கு போட்டியாக சீனா தருகிறது இலங்கைக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன்

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கி உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக இலங்கை உலக நாடுகளின் உதவியை நாடி வருகின்றது. இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.7500 கோடி கடன் உதவி வழங்கும் என்று பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்து இருந்தார். எரிபொருள்  மற்றும் உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்காக இந்தியா கடனுதவியை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் இலங்கைக்கு கடன் தர முன்வந்துள்ளது. இலங்கைக்கான சீனாவின் தூதர் க்யூசென்ஹாங் கூறுகையில், ‘‘இலங்கை அரசு கடன், வர்த்த கடனுதவியாக ரூ.19,000 கோடி கோரியுள்ளது. அதை பரிசீலிக்கிறோம். இலங்கையின் தற்போதைய நிலையை சீனா பயன்படுத்திக்கொள்ளாது. அந்நாட்டிற்கு உதவுவதற்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது’’ என்றார்….

The post இந்தியாவுக்கு போட்டியாக சீனா தருகிறது இலங்கைக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் appeared first on Dinakaran.

Tags : India ,China ,Sri Lanka ,Colombo ,Sri ,Lanka ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்