×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கொரோனா; 31 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 1,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தினசரி எண்ணிக்கை நேற்றை காட்டிலும் இன்று வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத்தொடங்கியது தொற்று  முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என  பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை வருகிற 31ஆம் தேதிக்கு பிறகு செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி  நேரத்தில் 1, 270 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 31ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,035 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவிலிருந்து   மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 829 ஆக உள்ளது. அத்துடன் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,859 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு  எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது 183.26 கோடி டோஸ்  செலுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது….

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேருக்கு கொரோனா; 31 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 1,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..! appeared first on Dinakaran.

Tags : pandemic ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...