இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2,06,65,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,69,51,731 பேர் குணமடைந்துள்ளனர்.! உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,82,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்தது.* புதிதாக 3,780 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,26,188 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,38,439 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,51,731 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34,87,229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.91% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.10% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 17.00% ஆக அதிகரித்துள்ளது.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2,06,65,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,69,51,731 பேர் குணமடைந்துள்ளனர்.! உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: